டெல்லியின் ரோகிணி செக்டார்-16 பகுதியில் புதன்கிழமை மாலை வேளையில், கட்டப்பட்டு வந்த புதிய கட்டிடம் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென சரிந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த திடீர் விபத்தால் ஒட்டுமொத்தப் பகுதியே இடிபாடுகளுக்கு நடுவே பெரும் பரபரப்பாக மாறியது. கட்டிடம் இடிந்து விழுந்த கோர விபத்தில், அங்கு பணியில் இருந்த மற்றும் அருகில் இருந்த பல தொழிலாளர்கள் கட்டிடக் கழிவுகள் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் உடனே முடுக்கிவிடப்பட்டன.
View this post on Instagram
இந்த கோர விபத்து நடக்கும் போது, அங்கு திரண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க முயன்ற நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆபத்தான இடிபாடுகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டவர்களைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் “நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள், உங்களை நாங்கள் எப்படியாவது பத்திரமாக காப்பாற்றி விடுவோம்” என்று தைரியம் கூறி மீட்கப் போராடும் திக் திக் நிமிடங்கள் பதிவாகியுள்ளன. இந்த கோர விபத்து மற்றும் மீட்பு வீடியோ பார்ப்போரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
