உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் மாயமான 28 வயது இளம்பெண் விதி, ஆறு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது தந்தையுடன் காட்டுப் பகுதிக்குச் சென்றபோது வழிதவறி மாயமானார். அவரைத் தேட ட்ரோன்கள், மோப்ப நாய் படை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், வனப்பகுதி அருகே உள்ள ஆற்றுப் பகுதியில் பெண் ஒருவர் பஜனை பாடிக்கொண்டிருப்பதை அந்த வழியாகச் சென்ற பெண்கள் கவனித்தனர். அந்தப் பெண் மாயமான விதி என்பது உறுதி செய்யப்பட்டு, அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
காட்டில் தனித்து விடப்பட்ட அந்த ஆறு நாட்களும், அந்தப் பெண் அங்கிருந்த இலைகள் மற்றும் இயற்கையாகக் கிடைத்த இலைகளை உண்டு தனது பசியைப் போக்கிக்கொண்டதாகத் தெரிவித்தார். காட்டு விலங்குகள் நடமாட்டம் உள்ள அந்த அடர்ந்த வனப்பகுதியில், எவ்வித அச்சமும் இன்றி பஜனைகளை மட்டும் பாடிக்கொண்டு அவர் உயிர் பிழைத்திருப்பதை கிராம மக்கள் ஒரு தெய்வீக அதிசயமாகப் பார்க்கின்றனர்.
நள்ளிரவு மற்றும் பகல் நேரக் கடும் குளிரிலும், நின்ற கால்களுடன் அலைந்ததால் ஏற்பட்ட சிறு காயங்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் அந்தப் பெண் மனவுறுதியுடன் உயிர் பிழைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
