அதிக மழைப்பொழிவு மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக, ஊழியர் ஒருவர் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி கேட்டு தனது நிறுவனத்திற்கு எளிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஆனால், இந்தச் சாதாரண கோரிக்கை எதிர்பாராத திருப்பமாக, அந்த ஊழியர் பணியிலிருந்து நீக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட்டை, ‘பிரதிக் ஷெட்டி’ என்ற பயனர் எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பரவி வரும் இந்த மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட், சமூக வலைத்தளப் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மோசமான வானிலை நிலவும் காலங்களிலும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், வேலை நீக்கம் போன்ற கடுமையான முடிவுகளை எடுக்கும் பெருநிறுவனங்களின் கொள்கைகள் குறித்து இணையவாசிகள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இச்சம்பவம், வேலை மற்றும் வாழ்க்கைக்கு இடையிலான சமநிலை மற்றும் ஊழியர்களின் நலன் சார்ந்த முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாக்கியுள்ளது.
