புதுச்சேரி மாநில அரசியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாகத் தொடங்கியுள்ளன. புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் இடையே பலமான கூட்டணி அமைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்போது ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, பாஜாக கூட்டணியில் இருந்து முழுமையாக விலகத் திட்டமிட்டுள்ளதாகவும், அங்குள்ள 3 தவெக ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது ஆட்சியைத் தொடர விரும்புவதாகவும் கோட்டை வட்டார ரகசியத் தகவல்கள் கசிந்துள்ளன.
முதலமைச்சர் ரங்கசாமி தவெக ஆதரவோடு புதிய நகர்வை மேற்கொண்டால், அது புதுச்சேரியில் காங்கிரஸிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக, தவெக உடனான தங்களது அரசியல் கூட்டணியை முன்கூட்டியே உறுதிப்படுத்த காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளவும், புதுச்சேரி அரசியல் களத்தில் தங்களது பிடியை வலுவாக்கவும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் விரைவில் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் அவர்களை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாக டெல்லி மற்றும் புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் தற்போது பலத்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
