தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களை அவர் நேரில் சந்தித்துப் பேசினார்.

எவ்வித பந்தாவும் இன்றி, வேலை செய்யும் இடத்திலேயே சாதாரண மக்களைப் போலத் தரையில் அமர்ந்து, அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் மிகவும் கனிவோடு கேட்டறிந்தார்.

அமைச்சரின் இந்தத் திடீர் எளிமையான அணுகுமுறையைக் கண்டு நெகிழ்ந்த உழைக்கும் பெண்கள், தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளை அவரிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டனர்.

அமைச்சரின் இந்தத் திடீர் விசிட் மற்றும் எளிய செயல்பாடு தற்போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.