உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக 6 வயது சிறுவன் ஒருவன் அவளது கள்ளக்காதலனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கான்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் பிரசாந்த் சிங் என்ற வாலிபருக்கும், பூனம் தேவி என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் தளம் வழியாக பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. பூனமின் கணவர் வேலை விஷயமாக வெளியே செல்லும் நேரங்களில், பிரசாந்த் லக்னோவில் உள்ள பூனமின் வாடகை வீட்டிற்கு வந்து அடிக்கடி தங்கி சென்றுள்ளார்.

அதோடு சம்பவத்தன்று பூனம் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த பிரசாந்த் தங்களுடைய தனிமைக்கு அந்த 6 வயது சிறுவன் இடையூறாக இருப்பதாகக் கூறி, குழந்தையை கொடூரமாக உதைத்தும், குத்தியும், சமையலறைக்கு பயன்படுத்தும் இரும்பு கரண்டியால் தாக்கியும் கொலை செய்துள்ளார்.

இதனால் கொலை செய்த பின்னர், சிறுவன் குளியலறையில் தவறி விழுந்துவிட்டதாக நாடகமாடி மருத்துவமனையில் உடலை ஒப்படைத்துள்ளனர். ஆனால், குழந்தையின் உடலில் இருந்த பலத்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த லக்னோ மடையோன் பகுதி காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், பிரசாந்த் தான் குழந்தையை அடித்துக் கொன்றார் என்ற உண்மை வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து, தப்பியோட முயன்ற குற்றவாளி பிரசாந்த் சிங்கை போலீசார் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கரண்டியையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் குழந்தையின் தந்தை தினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில், கள்ளக்காதலன் பிரசாந்த் மற்றும் தாய் பூனம் தேவி ஆகிய இருவர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 103-ன் கீழ் கொலை வழக்குபதிவு செய்யப்பட்டு, பெண்ணின் பின்னணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.