இணையத்தில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பூங்காவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், தள்ளாத வயதில் ஒரு பாட்டி, அங்கிருக்கும் ‘Leg Press’ எனப்படும் உடற்பயிற்சி கருவியைப் பயன்படுத்தி, மிகவும் கடினமான முறையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதோடு அவரது வேகம் மற்றும் உடல் வலிமையைப் பார்க்கும்போது, ஒரு 25 வயது இளைஞனுக்குக் கூட இவ்வளவு ஸ்டெமினா இருக்குமா என்பது சந்தேகமே. அந்த வயதிலும் அவர் காட்டும் ஈடுபாடு மற்றும் சுறுசுறுப்பு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவைப் பார்க்கும் நமக்கே முட்டி வலி வந்துவிடும் போல, அந்த அளவுக்கு அவர் மிகவும் விறுவிறுப்பாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.
See this Instagram video by @sudhaammu_06 https://t.co/R7wPT43SxR
“>
அதே வீடியோவின் மற்றொரு பக்கத்தில், ஒரு சிறிய குழந்தை, தனது தந்தையின் அருகில் அமர்ந்து செல்போனில் மூழ்கியிருப்பதைக் காண முடிகிறது. இது தற்போதைய சமூகத்தின் தலைகீழ் மாற்றத்தை உணர்த்தும் ஒரு காட்சியாக உள்ளது. விளையாட வேண்டிய வயதில் குழந்தைகளும், ஓய்வெடுக்க வேண்டிய வயதில் முதியவர்களும் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது போல ஒரு தோற்றம் இந்த வீடியோவில் உள்ளது.
இதனால் போன் மூலம் வரும் கேம்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள், இன்றைய இளைஞர்களின் உடலையும் மனதையும் எவ்வளவு பலவீனப்படுத்தி வருகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதே நேரத்தில், அந்த காலத்து பாட்டிகளின் உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் இன்னும் குறையாமல் இருப்பதை இந்த வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, பலரையும் சிந்திக்க வைப்பதோடு, உடல்நலத்தின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
