நள்ளிரவு 1 மணி அளவில் 7 வயது சிறுவன் ஒருவன் டீ குடிப்பதற்காகத் தனது பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக ராபிடோ (Rapido) பைக் ரைடு புக் செய்த விசித்திரமான மற்றும் சுவாரசியமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேங்க் ஏடிஎம் (Union Bank ATM) அருகேயுள்ள பிக்கப் லொகேஷனுக்கு வந்த ராபிடோ ஓட்டுநர், அந்த வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு அடையாளம் கேட்டபோது, அந்தச் சிறுவனால் தனது இடத்தை ஒழுங்காக விளக்க முடியாமல் “அருகில் இரண்டு நாய்கள் குரைக்கின்றன” என்று மழலை மாறாமல் பதிலளித்துள்ளான்.

இதனால் சந்தேகமடைந்த ஓட்டுநர் தொடர்ந்து விசாரித்தபோது, தனக்கு 7 வயதுதான் ஆகிறது என்றும், பெற்றோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தனக்கு இந்த நள்ளிரவில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசையால் பைக் புக் செய்ததாகவும் அந்தச் சிறுவன் கூலாகக் கூறியதைக் கேட்டு ஓட்டுநர் அப்படியே அடியோடு ஷாக் ஆகியுள்ளார்.

அந்தச் சிறுவன் ஓட்டுநரை “முட்டாள்” என்று திட்டி, தன்னை சீக்கிரம் அழைத்துச் செல்லுமாறு அடம் பிடித்தபோதிலும், அந்த ரைடர் சற்றும் பதற்றமடையாமல் மிகவும் பொறுமையாக அவனுக்குப் புரிய வைத்துள்ளார்.

நள்ளிரவு 1 மணிக்குத் தனியாக, லொகேஷன் கூடச் சொல்லத் தெரியாத ஒரு குழந்தையைத் பெற்றோருக்குத் தெரியாமல் அழைத்துச் செல்ல முடியாது என்று கூறி, சிறுவனின் பாதுகாப்பைக் கருதி அந்தப் பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.