குஜராத் மாநிலம் சூரத்தின் லிம்பாயத் பகுதியில், கட்டுமானப் பணியில் இருந்த ஒரு வீட்டின் முதலாவது மாடி பால்கனியில் இருந்து தாயும் மகளும் நிலைதடுமாறி கீழே விழுந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த பால்கனியில் பாதுகாப்பு கம்பிவேலி இன்னும் அமைக்கப்படாததால், அவர்கள் அங்கு நின்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அடிவாரத் தரையில் விழுந்துள்ளனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்தின் முழு காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

“>

இதனால் இவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தபோதிலும், நல்வாய்ப்பாக தாயும் மகளும் எந்தவொரு பெரிய காயமுமின்றி அதிசயமாக உயிர் தப்பியுள்ளனர். கீழே விழுந்த அடுத்த கணமே அந்த சிறுமி சுதாரித்துக் கொண்டு எழுந்து, தன் தாய்க்கு உதவ ஓடுவதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. விபத்து நடந்த உடனே ஓடிவந்த அண்டை வீட்டார் அவர்களை மீட்டு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர்.

தற்போது அவர்கள் இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, அரைகுறையாகக் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகளின் போது தற்காலிக தடுப்புகள் போன்ற அடிப்படை பாதுகாப்பு விதிகளை Builders மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் கண்டிப்பாகப் பின்