இரயிலில் பயணம் செய்த பெண் பயணிகள் சிலர் சத்தமாக பஜனைப் பாடல்களைப் பாடியதால், சக பயணி ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில், சத்தமாக பாடிக்கொண்டிருந்த பெண்களிடம் அந்த பயணி, “கொஞ்சம் தயவு காட்டுங்கள்” என்று கூறி தங்களுக்கு ஏற்படும் தொந்தரவை சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அதற்குப் பதிலளித்த ஒரு பெண், “நாங்கள் கடவுளின் பஜனையைத் தானே பாடுகிறோம், இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று தங்களது செயலை நியாயப்படுத்தி வாதிடுகிறார்.
‘Kuch Toh Daya Dikhao’: Train Passenger Confronts Women Singing Loud Bhajans On Train (WATCH Viral Video) https://t.co/TjhN3cEGvc
“>
மேலும் பொது இடத்தில் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பது தொடர்பான இந்த மோதல் குறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரி சம்பந்தப்பட்ட பெண்களை எச்சரிக்கும் வகையில், “மீண்டும் இது போன்ற புகார்கள் வந்தால், அடுத்த ரயில் நிலையத்திலேயே உங்களை இறக்கிவிட்டுவிடுவோம்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதைப் பதிவிட்ட அந்த பயணி, மற்றவர்களுக்கும் இது போன்ற தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காகவே தான் அதிகாரிகளிடம் முறைப்படி புகார் அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பொது ஒழுக்கம் மற்றும் மத வெளிப்பாடு குறித்த விவாதங்களை இணையத்தில் கிளப்பியுள்ளது.
