அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் சனிக்கிழமை தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தெஹ்ரானில் மட்டுமே சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி மக்கள் வரை இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு இவ்வளவு பிரம்மாண்டமான கூட்ட நெரிசல் மற்றும் அங்கு நிலவும் கடுமையான வெயில் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டு, மக்கள் உயிரிழக்க நேரிடலாம் என்ற அச்சத்தில் ஈரான் அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த இறுதிச்சடங்கு ஊர்வலங்களின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 1,500 முதல் 3,000 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஈரானின் ரெட் கிரசண்ட் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரித்துள்ளன. இதனால் தெஹ்ரானில் உள்ள பெஹெஷ்ட்-இ ஜஹ்ரா மயானத்தில் ஆயிரக்கணக்கான புதிய கல்லறைகள் முன்கூட்டியே தோண்டப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஈரானில் இதற்கு முன்பும் இது போன்ற பெரிய இறுதிச்சடங்கு ஊர்வலங்களின் போது பயங்கரமான கூட்ட நெரிசல்கள் ஏற்பட்டு மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டில், ஈரானிய ராணுவ தளபதி காசெம் சுலைமானியின் இறுதிச்சடங்கின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 56-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதேபோல், 1989-ல் முந்தைய உச்ச தலைவர் ஆயதுல்லா ருஹொல்லா கொமேனியின் இறுதிச்சடங்கிலும் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டன. இந்த கசப்பான கடந்த கால அனுபவங்களை மனதில் வைத்தே, ஈரான் அதிகாரிகள் தற்போது கூடுதல் கல்லறைகளைத் தயார் செய்துள்ளனர்.

மேலும், அவசரச் சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 24 மணி நேரமும் இலவச பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. கமேனியின் உடல் ஈரான் மற்றும் ஈராக்கின் முக்கிய நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக மஷாத்  நகரில் அடக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.