பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபர், தனது சொகுசு காரான லம்போர்கினியை ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநரிடம் தற்காலிகமாக மாற்றி, அவரிடம் ஆட்டோவை வாங்கி ஓட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது இதயங்களை வென்றுள்ளது.

மேலும் அந்த தொழிலதிபர் தனது விலையுயர்ந்த காரை ஆட்டோ ஓட்டுநருக்கு ஓட்டக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தானும் அந்த ஆட்டோவை ஓட்டி மகிழ்ந்துள்ளார். இந்த அரிய தருணத்தை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் “மறக்க முடியாத ஒரு தருணம்” என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

“>

இதனால் பணம், அந்தஸ்து என அனைத்தையும் கடந்து, ஒரு எளிய மனிதரின் ஆசையை மதித்து அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அந்த தொழிலதிபரின் பெருந்தன்மையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆடம்பரமான காரை ஓட்டிப் பார்க்கும் ஆட்டோ ஓட்டுநரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு, எல்லை இல்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆட்டோவை ஜாலியாக ஓட்டும் தொழிலதிபரின் எதார்த்தமான குணமும் பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது. இந்த வீடியோ மற்றும் செய்தி தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று, மனிதநேயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகப் பேசப்பட்டு வருகிறது.