எலிகள் வீடுகளில் செய்யும் அட்டகாசங்களும், கொடுக்கும் தொல்லைகளும் அனைவரும் அறிந்ததே. பொதுவாக எலித் தொல்லை தாங்க முடியாமல் மக்கள் எலி மருந்து வைப்பதையோ அல்லது கூண்டில் பிடித்து தூரக் கொண்டு போய் விடுவதையோ நாம் பார்த்திருப்போம். ஆனால், இணையத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, மனித நேயமுள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட சில நபர்கள் செய்துள்ள இந்த கொடூரச் செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குத் தொல்லை கொடுத்த ஒரு எலியை உயிரோடு பிடித்து, அதன் கைகளைக் கட்டி, வீட்டின் மின்சாரப் பிளக் பாயிண்ட்டிற்குள் வலுக்கட்டாயமாகச் சொருகி, சுவிட்ச் ஆன் செய்து மின்சாரம் பாய்ச்சி துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளனர்.

இந்த கொடூரக் காட்சியை ஒரு சாதனையாக நினைத்து வீடியோவாகப் பதிவு செய்து இணையத்திலும் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி தற்பொழுது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, பெரும் அதிர்வலைகளையும் நெட்டிசன்களின் கோபத்தையும் கிளப்பியுள்ளது.

“எலிகள் நமக்கு என்னதான் தொந்தரவு கொடுத்தாலும், அதுவும் ஒரு உயிரினம் தான்; அதை இந்த அளவிற்குச் சித்திரவதை செய்து கொல்லக் கூடாது” என்று சமூக வலைத்தளவாசிகள் தங்களது கண்டனங்களை மிகக் காட்டமாகப் பதிவு செய்து வருகிறார்கள்

 

View this post on Instagram

 

A post shared by Berita (@beritainterkini1)

“>

வாயில்லாப் பூச்சியைக் கொடூரமாகத் துன்புறுத்திக் கொன்ற அந்த நபர்களின் வக்கிரப் புத்தியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருவதுடன், விலங்கு நல ஆர்வலர்களும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு சிறிய உயிரினத்தின் மீது காட்டப்பட்ட இந்த அதீத வன்முறை, தற்கால மனிதர்களில் சிலரின் மன வக்கிரத்தையும் இரக்கமற்ற தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது.