தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடேறி வரும் நிலையில், தமிழக வெற்றி கழகம் (தவெக) மற்றும் அதன் தலைவர் விஜய்யை டார்கெட் செய்து முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய நிர்வாகியுமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள அதிரடி பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக-வின் அரசியல் நகர்வுகள் மற்றும் எதிர்கால ஆட்சி அமைப்பது குறித்த கேள்விக்கு மிகவும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அப்போது பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி என்பது தமிழ்நாட்டில் அமைந்தால் கூட, அது 6 மாதங்கள் கூடத் தாக்குப் பிடித்து நீடிக்காது; அதுமட்டுமன்றி, அப்படி ஒரு ஆட்சி அமைந்தால் அந்த ஆட்சியை நீடிக்க விடாமல் செய்ய நாங்களும் விடமாட்டோம்” என்று ஓப்பனாக வார்னிங் கொடுத்துள்ளார்.
தவெக-வின் அரசியல் பலத்தை அடியோடு நிராகரிக்கும் வகையிலும், நேரடியாக சவால் விடும் வகையிலும் திமுக முன்னாள் அமைச்சர் பேசியுள்ள இந்த அதிரடி கருத்துக்கள் தற்போது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி செம்ம வைரலாகி வருகிறது.
