உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியில் ஒரு இளம்பெண் மூன்று கொடூரர்களால் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாயில் துணி திணிக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில், அவர் மிகவும் மோசமான மற்றும் அவலமான சூழ்நிலையில் சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை அறிந்த உள்ளூர் மக்கள், உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், ரேபரேலி காவல்துறை மற்றும் தடயவியல் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

மேலும் காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்தியதில், குற்றப் பின்னணி கொண்ட அந்த மூன்று முக்கிய குற்றவாளிகளையும் வெறும் 6 மணி நேரத்திற்குள்ளாகவே மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.