இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும், ‘தி வால்’ (The Wall) என்று அழைக்கப்படுபவருமான ராகுல் டிராவிட்டிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவரது கிரிக்கெட் பாரம்பரியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், அவரது மகன் சமித் டிராவிட் கிரிக்கெட் மைதானத்தில் தனது அசாத்திய திறமையால் மின்னத் தொடங்கியுள்ளார். ‘மகாராஜா டிராபி கேஎஸ்சிஏ டி20’ லீக் தொடரில் கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், தனது வெடிவிருப்பான பேட்டிங் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் தனது தந்தையைப் போலவே நேர்த்தியான கிளாசிக் ஷாட்டுகளை ஆடிய சமித், அதே நேரத்தில் நவீன டி20 ஆட்டத்திற்கு ஏற்ப அதிரடியாக விளையாடி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
Samit Dravid had the whole field covered 🤩
Catch all the action from the Maharaja Trophy KSCA T20 2026 LIVE on FanCode 📲#MaharajaTrophy pic.twitter.com/gurjHdavpE
— FanCode (@FanCode) July 1, 2026
ஜூலை 1-ஆம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும் ஹூப்ளி டைகர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது பெங்களூரு அணி. அணியின் தொடக்க வீரர்களான புவன் மோகன் (10 ரன்கள்), கிருஷ்ணா ஸ்ரீஜித் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் களம் புகுந்த சமித் டிராவிட், கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் குவித்து அசத்தினார்.
