தற்பொழுது உலக நாடுகள் முழுவதும் கோடைகால வெப்ப அலை தாறுமாறாக வாட்டி வதைத்து வரும் நிலையில், சீனா தனது  புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி கட்டிடங்களின் மேல் தளத்திலிருந்து செயற்கை மழையைப் பொழிய வைத்து வெப்பநிலையைக் குறைக்கும் ஒரு புதுமையான ‘ரூஃப்டாப் ரெயின்’ (Rooftop Rain) தொழில்நுட்பத்தைக் களம் இறக்கியுள்ளது சோசியல் மீடியா ஏரியாவிலும் மிகப்பெரிய புயலையும்  விவாதத்தையுமே கிளப்பியுள்ளது.

ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வெயில் கொடுமையால் ரயிலின் தண்டவாளங்களே உருகும் அளவுக்கு அராஜகமான கிளைமேட் நிலவி வரும் வேளையில், சீனா இதற்குக் கச்சிதமான ஒரு தீர்வு கண்டுபிடித்து மாஸ் காட்டியுள்ளது. சீனாவின் ஷான்சி (Shaanxi) மாகாணத்தில் உள்ள ஒரு பெரிய ரெசிடென்ஷியல் சொசைட்டி குடியிருப்பில்தான் இந்தத் திட்டம் தற்பொழுது அதிரடியாகப் பரீட்சார்த்த முறையில் சோதிக்கப்பட்டு வருகிறது.

அங்குள்ள அடுக்குமாடி கட்டிடங்களின் கூரைகளில் ஒரு பிரத்யேக ‘மிஸ்ட் கூலிங் சிஸ்டம்’ (Mist Cooling System) பொருத்தப்பட்டு, அதன் மூலம் பனித்துளி போன்ற லேசான செயற்கை மழை நீர் கட்டிடங்களைச் சுற்றி தெளிக்கப்படுகிறது.

இந்த மெகா சிஸ்டம் மூலம், வெறும் சில நிமிடங்களிலேயே சுற்றியுள்ள பகுதிகளின் வெப்பநிலை சுமார் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அக்மார்க்காகக் குறையும் என்று சீனா தரப்பில் அதிரடி லெவலில் உரிமை கோரப்பட்டுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் (Ministry of Foreign Affairs of China) செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் (Mao Ning) இந்த புதுமையான தொழில்நுட்ப வீடியோவைத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி  பரவி வரும் அதே வேளையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உலகளாவிய நெட்டிசன்கள் மத்தியில் தண்ணீரை இப்படி அராஜகமாக வீணடிப்பது குறித்து கவலைகளும் ட்ரோல்களும் எழத் தொடங்கியுள்ளன.

கமெண்ட் செக்ஷனில் பல பயனர்கள், “சீனாவிடம் வீணடிப்பதற்கு இவ்வளவு தண்ணீர் இருக்கிறதா?! இந்தத் தொழில்நுட்பம் நல்லா இருந்தாலும், கட்டிடத்திலிருந்து கீழே விழும் அந்தத் தண்ணீரை அப்படியே மறுசுழற்சிக்குச் சேகரிக்கும் சிஸ்டத்தையும் சேர்த்தே சீனா உருவாக்கியிருக்கலாம்” என்று தங்களது கருத்துக்களை ஓப்பனாகத் தெரிவித்து வருகின்றனர்.