புனேவில் உள்ள ஒரு ராட்சத சிமெண்ட் பைப்லைனுக்குள் சிக்கி, மரணப் போராட்டத்திலிருந்த பிரம்மாண்ட ‘கவா’ வனத்துறையினரின் அசாத்திய முயற்சியால் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. பைப்லைனுக்குள் மாட்டிக்கொண்டு நகர முடியாமல் தவித்த இந்த காட்டெருமையை, மீட்புக் குழுவினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு சிறு காயம் கூட இல்லாமல் சாதுரியமாக மீட்டெடுத்தனர்.

மேலும் மீட்புக்குப் பின், வனவிலங்கு மருத்துவக் குழுவினர் நடத்திய தீவிர மருத்துவப் பரிசோதனையில் அந்த காட்டெருமை முழு ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த காட்டெருமையை அதன் சொந்த காட்டுப் பகுதிக்கே அனுப்ப வனத்துறை திட்டமிட்டது.

“>

அதன்படி, நள்ளிரவு நேரத்தில் ‘சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலை’ வழியாக பலத்த பாதுகாப்புடன் அந்த காட்டெருமை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. வார்தா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ‘போர் புலிகள் காப்பகத்தின்’  அடர்ந்த மையப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு, அது நள்ளிரவே பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

இதனால் மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்த அந்த காட்டெருமை, தற்போது எந்தவித பயமும் இன்றி தனது சொந்த இயற்கையான வாழிடத்தில் சுதந்திரமாக உலா வரத் தொடங்கியுள்ளது. இந்த திக் திக் மீட்பு ஆபரேஷன் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது!