இன்றைய நவீன உலகில், பிள்ளைகளின் விருப்பத்தைக் கேட்காமல், பணக்கார வரன் என்ற ஒரே காரணத்திற்காகப் பெற்றோர் செய்யும் கட்டாயத் திருமணங்கள் எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி. புனேவைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் சியா கோயல், தனது மார்வாடி குடும்பத்தின் கௌரவத்திற்காக 26 வயது தொழிலதிபர் கேதனைத் திருமணம் செய்யச் சம்மதித்தார். ஆனால், கேதனுக்கு லேசான வழுக்கையும், திக்குவாயும் இருந்ததால் சியாவிற்கு அவரைப் பிடிக்கவில்லை. கோடி கணக்கில் சொத்து இருந்தாலும், தன் பள்ளிப் பருவக் காதலன் சேத்தன் சௌத்ரியுடன் சேர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க லோஹ்காட் கோட்டையின் 400 அடி உயரக் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு கேதனைக் கொடூரமாகக் கொலை செய்தார் சியா.
விபத்து என்று நாடகமாடிய சியா மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல, கடந்த 2025 மே மாதம் இந்தூரைச் சேர்ந்த சோனம் என்ற 24 வயது பெண், பெற்றோரின் வற்புறுத்தலால் தொழிலதிபர் ராஜாவைத் திருமணம் செய்தார். ஆனால், திருமணமான 12 நாட்களிலேயே மேகாலயாவிற்கு ஹனிமூன் சென்ற இடத்தில், தனது பள்ளிப் பருவக் காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் சேர்ந்து கூலி படை மூலம் கணவன் ராஜாவைத் தன் கண் முன்னாலேயே வெட்டிக்கொலை செய்து பள்ளத்தாக்கில் வீசினார். இந்தூரின் பிரபல ‘ப்ளூ டிரம் மர்டர்’ வழக்கில், லண்டனிலிருந்து திரும்பிய கடற்படை அதிகாரி சௌரவ் ராஜ்புத்தை, அவரது மனைவி முஸ்கான் மற்றும் காதலன் சாஹில் ஆகியோர் துண்டு துண்டாக வெட்டி சிமெண்ட் டிரம்முக்குள் மறைத்து வைத்த கொடூரமும் அரங்கேறியுள்ளது.
இன்னொரு சம்பவத்தில், புனேவைச் சேர்ந்த மயூரி தாண்ட்கே என்ற பெண், பெற்றோர் நிச்சயம் செய்த சாகர் கதம் என்பவரைத் தனக்குப் பிடிக்காததால், கூலிப்படைக்கு 1.5 லட்சம் ரூபாய் கொடுத்து அவரது கை, கால்களை அடித்து உடைக்கச் செய்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாப்பிள்ளை கோமாவுக்கே சென்றுவிட்டார். இந்த இளம் தலைமுறை (Gen Z) பெண்கள் ஏன் இவ்வளவு கொடூரமாக மாறுகிறார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறும்போது, “பெற்றோரின் அழுத்தத்தால் திருமணத்திற்குச் சம்மதித்தாலும், இவர்களின் மூளையில் சுரக்கும் ‘டோபமைன்’ (Dopamine) ஹார்மோன் பழைய காதலன் மீதான ஈர்ப்பையே அதிகப்படுத்துகிறது.
சிறு வயது முதலே இன்டர்நெட், ஸ்மார்ட்போன், சோஷியல் மீடியா என வாழ்ந்த இந்தத் தலைமுறையினர், எதற்கும் துணியும் அவசரப் புத்தி உடையவர்களாக இருக்கிறார்கள்; விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை” என்கிறார்கள். தற்போது சோனம் ஜாமீனில் வெளிவந்துள்ளார், முஸ்கான் சிறையில் இருக்கிறார், சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சியாவும் இப்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். எனவே, பெற்றோர்களே பிள்ளைகளின் சம்மதமின்றி, அவர்களின் மனிவிருப்பத்திற்கு மாறாகத் திருமணத்தை வற்புறுத்துவதைத் தவிருங்கள், தேவைப்பட்டால் உளவியல் ஆலோசனையைப் பெறுங்கள்; இல்லையேல் சியா, சோனம் போன்ற விபரீதங்களே மிஞ்சும்.
