திருமண விழாக்களில் விதவிதமான உணவுகள் பரிமாறப்படும் போது, மக்கள் வரிசையில் நின்று நிதானமாக வாங்கி உண்பதே வழக்கம். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு எக்ஸ் (X) பதிவின் வீடியோவில், ஒரு திருமண வீட்டின் உணவுப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த ‘சௌமீன்’ (Chowmein) என்ற நூடுல்ஸ் வகை உணவை, அங்கு வந்திருந்தவர்கள் சற்றும் நாகரிகம் பாராமல் போட்டி போட்டுக்கொண்டு அடிதடி ரேஞ்சுக்கு அவசர அவசரமாக தட்டுகளில் அள்ளிச் செல்லும் வினோத காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஒருவர் மேல் ஒருவர் கையை நுழைத்து, பாத்திரத்தில் இருக்கும் உணவை எப்படியாவது முதலில் எடுத்துவிட வேண்டும் என்று அவர்கள் காட்டும் ஆக்ரோஷம் பார்ப்பவர்களை வாயடைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன் ஒருவர், “இது பசி கொடுமை (பஞ்சம்) இல்லை என்றால் வேறு என்ன? நம் நாட்டில் பட்டினி பஞ்சம் உச்சக்கட்ட எல்லையைத் தாண்டிவிட்டது என்று மக்கள் சொல்லும் அளவிற்கு இப்படிச் செய்கிறார்களே! எதையாவது செய்வதற்கு முன்னால் நாம் முட்டாள்தனத்தின் எல்லையைத் தாண்டுகிறோம் என்று ஒருமுறை கூட இவர்கள் யோசிப்பதில்லையா?” எனத் தனது கடுமையான ஆதங்கத்தையும் கண்டனத்தையும் பதிவிட்டுள்ளார்.
भुखमरी नहीं तो क्या है 🤦
शादी में चाऊमीन एसे खाओ कि लोग कहे कि सच में हमारे यहां
भुखमरी चरम सीमा पार कर चुकी है गजब लोग है क्या करने से
पहले एक बार भी नहीं सोचते कि हम मूर्खता की हद पार कर रहे pic.twitter.com/lqkpQRMyLz— KUNDAN PATEL (@KUNDAN00PATEL) June 30, 2026
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, ஒருபுறம் கடுமையான விவாதங்களையும், மறுபுறம் பலத்த சிரிப்பலையையும் ஏற்படுத்தி மரண மாஸாக ட்ரெண்டாகி வருகிறது.
