உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) மருத்துவ அறிவியல் நிறுவன (IMS) விடுதி அறையில், 26 வயதே ஆன இளம் ஜூனியர் மருத்துவர் ஒருவர் தனது கையில் தானே ஐவி (IV) டிரிப் மூலம் விஷ மருந்தை ஏற்றித் தற்கொலை செய்துகொண்டுள்ள அதிரவைக்கும் விபரீதச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் சோக அலையையுமே கிளப்பியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 26 வயதான டாக்டர் ரித்விக் குந்து, பிஹெச்யு மருத்துவமனையின் மயக்க மருந்து (Anesthesia) பிரிவில் ஜூனியர் ரெசிடென்ட் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை மதியம் முதல் அவர் பணிக்கு வராததாலும், அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாலும் சந்தேகமடைந்த சக மருத்துவர்கள் சுஸ்ருத் விடுதியில் உள்ள அவரது அறை எண் 361-ஐத் தட்டியபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.
உடனடியாக லங்கா காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ரித்விக் தனது படுக்கையில் மயங்கிக் கிடந்ததும், மயக்க மருந்து நிபுணரான அவர் தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தித் தனது கையில் ஐவி கேனுலா (IV Cannula) மூலம் ஏதோ ஒரு ஆபத்தான மருந்தை அதிக அளவில் ஏற்றித் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
சம்பவ இடத்திலிருந்து போலீசார் கைப்பற்றிய உருக்கமான தற்கொலைக் கடிதத்தில், “அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள், உங்களது எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை; வாழ்க்கையில் அதிக போராட்டமும் மன உளைச்சலும் உள்ளதால் என் சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுக்கிறேன், என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை” என்று ரித்விக் எழுதியுள்ளார்.
மேலும், அக்கடிதத்தில் ஒரு மர்மப் பெண் (Mystery Girl) குறித்துக் குறிப்பிட்டுள்ள அவர், “அந்தப் பெண் என் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தாள், என் வாழ்க்கையில் எனக்காகப் பல விஷயங்களைச் செய்துள்ளாள்” என்று உருகி எழுதியுள்ளார். இவ்வளவு அன்பு கிடைத்தும், நாட்டின் மதிப்புமிக்க மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக இருந்தும் அவர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்ற மர்மம் இன்னும் விலகாத நிலையில், லங்கா காவல் நிலைய போலீசார் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, பணிச்சுமை (Work Load) மற்றும் மொபைல் கால் விபரங்கள் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த நெஞ்சை உலுக்கும் செய்தி தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களிலும் பயங்கரமாக ட்ரெண்டாகி, “இவ்வளவு படிச்ச ஒரு டாக்டருக்கே இந்த நிலைமையா .. மன அழுத்தம்ங்கிறது எவ்வளவு பெரிய விபரீதம் பாத்தீங்களா!” என்று நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த வேதனையுடனும் அடுக்கடுக்கான கமெண்ட்டுகளுடனும் இணையத்தில் பயங்கரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
