இந்தியாவின் மிக நீளமான கடற்பாலமான மும்பை ‘அடல் சேது’ பாலத்தின் அருகே, இதுவரை யாரும் நினைத்துக்கூட பார்க்காத ஒரு விசித்திரமான விலங்கு உலா வரும் வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் அதிரவைத்துள்ளது.

மேலும் கடலில் அலைகள் உள்வாங்கிய ஒரு பகுதியில், விசித்திரமான விலங்கு ஒன்று மெதுவாக ஊர்ந்து செல்வது அச்சு அசலாகப் பதிவாகியுள்ளது. வீடியோவைப் பார்த்த பலரும், அது பனிப்பிரதேசங்களில் மட்டுமே வாழக்கூடிய ‘சீல்’ எனப்படும் கடல் நாய் தான் என்று பதிவிட, விஷயம் காட்டுத்தீயாய் பரவியது.

“>6

இதனால் மும்பை கடலில் கடல் நாயா? என்று பலரும் வாயடைத்துப் போயினர். ஆனால், நெட்டிசன்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் இதற்குப் பின்னணியில் இருக்கும் உண்மையை உடைத்துள்ளனர்! “மும்பையின் தட்பவெப்ப நிலைக்கு கடல் நாய்களால் வாழவே முடியாது.

இந்நிலையில் அது கடல் நாய் கிடையாது; நவி மும்பையின் சதுப்புநிலக் காடுகளில் வாழும் ஒருவகை ‘நீர்நாய்’என்று ஆதாரங்களுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் தெரியவில்லை என்றாலும், இந்த ‘கடல் நாய் vs நீர்நாய்’ விவாதம் இணையத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்