தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் ஒரே அடியாக 41 ஆகக் குறைந்து அக்கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக 5 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து துறந்திருந்த நிலையில், நடப்பு சட்டமன்றத் தொடர் முடிவடைந்த கையோடு அதிமுகவிலிருந்து பதவி விலகும் 6-வது எம்.எல்.ஏ-வாகஎம்.ஆர்.விஜயபாஸ்கர் மாறியிருப்பது கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்திலும், அதிமுக கூடாரத்திலும் ஒரு மெகா விபரீத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து அதிமுகவின் பலம் சரிந்து குறைந்து கொண்டே போவது குறித்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்களிடையே பெரும் விவாதமும், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்ற மாபெரும் எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது.
