பிலிப்பைன்ஸ் நாட்டில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒட்டுமொத்தப் பகுதியும் பயங்கரமாகக் குலுங்கிய போது, தங்களின் உயிரைப் பற்றிய பயமே இல்லாமல் தங்களது இளைய உடன்பிறப்புகளைக் காப்பாற்ற விரைந்து சென்ற வீரமிக்க சிறுவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த இணையத்தையும் கலங்க வைத்துள்ளது.

பூமி அதிரத் தொடங்கிய அந்தத் திடுக்கிடும் நொடியில், வீட்டை விட்டு வெளியே ஓடித் தப்பிக்க நினைக்காமல், அறையில் இருந்த தங்களது பிஞ்சுத் தம்பிகளை ஓடிச் சென்று வாரி அணைத்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்தஅண்ணன்களின் பாசம் அங்கே இருந்த சிசிடிவி கேமராவில் அப்பட்டமாகப் பதிவாகியுள்ளது.

“>

ஆபத்து காலத்திலும் சுயநலமில்லாமல் உடன்பிறப்பைக் காக்கத் துடித்த பிள்ளைகளின் இந்தச் செயலைப் பார்த்த நெட்டிசன்கள், “இதுவல்லவா அருமையான குழந்தை வளர்ப்பு! பெத்தவர்கள் இவர்களை மிகச் சிறந்த மனிதர்களாக வளர்த்துள்ளனர்” என தங்களது பாராட்டுக்களையும் நெகிழ்ச்சியையும் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.