பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், மொஹரம் ஊர்வலத்தின் போது காவல் துறையின் சீருடை அணிந்த நபர் ஒருவர் கையில் வாள் ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் இருப்பது காந்தி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் முஸ்தகிம் கான் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து முசாபர்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் காந்திஷ் குமார் மிஸ்ரா உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், அவரை காவல் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முசாபர்பூர் மேற்கு பகுதி துணை காவல் கண்காணிப்பாளர் சுசித்ரா குமாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வீடியோ வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
शरीर पर वर्दी और हाथ में तलवार।
मुहर्रम के दिन इंटरनेट पर छा गए मुजफ्फरपुर का यह पुलिसकर्मी। pic.twitter.com/9sXXRiDcAl— The Bihar (@Thebihar_in) June 27, 2026
“>
எனினும், முழுமையான விசாரணை மற்றும் ஆய்வுக்குப் பிறகே இந்தச் செயலில் ஈடுபட்ட அதிகாரியின் மீது அடுத்தகட்டத் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறை விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட இந்த சம்பவம் தொடர்பாகப் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
