திருமண விழா ஒன்றில் பானிபூரி சாப்பிடுவதற்காக வந்த கூட்டம் கட்டுக்கடங்காமல் முண்டியடித்ததால், விரக்தியடைந்த கடைக்காரர் விசித்திரமான முறையில் மக்களுக்கு நேரடியாக ஊட்டிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சிரிப்பலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகத் திருமண விசேஷங்களில் பானிபூரி கடைகளில் மக்கள் வரிசையில் நின்று சாப்பிடுவது வழக்கம், ஆனால் இந்த வீடியோவில் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த கூட்டம் சூழ்ந்து கொண்டு முண்டியடித்ததால்,பொறுமையிழந்த வியாபாரி ஒவ்வொரு பிளேட்டாகப் பரிமாறுவதை விடுத்து, தன் கைகளாலேயே பானிபூரிகளை எடுத்து காரசாரமான நீரில் முக்கி நேரடியாக அப்படியே மக்களின் கைகளில் கொடுக்க தொடங்கினார்.
மேலும் அங்கிருந்த மக்களும் எந்தவொரு தயக்கமும் இன்றி கைகளையும் வாயையும் நீட்டி அதை ஆர்வமாக வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். “கவுண்டர் திறக்கப்பட்டவுடன் திருமண விருந்தினர்கள் பசியுள்ள சிங்கங்களாக மாறிவிட்டனர்” என நெட்டிசன்கள் பலர் இதை வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றன.
जब शादी में पहली बार गोलगप्पे का काउंटर खुले… 😂 pic.twitter.com/ARVYprRn41
— Renu Yadav (@renuy305) June 26, 2026
“>
அதே வேளையில், இன்னும் சிலரோ இதில் சுத்தமே இல்லை என்றும், ஆரோக்கியத்திற்கு இது கேடு விளைவிக்கும் என்றும் தங்களின் தூய்மை குறித்த கவலைகளையும் கண்டனங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
