ஹங்கேரி நாட்டின் தலைநகரில் உள்ள ஒரு மருத்துவமனை ஊழியர் ஒருவர் மனித உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி, தனது குடியிருப்பில் சேமித்து வைத்து சமைத்துச் சாப்பிட்டு வந்த நரமாமிசக் கொடூரம் அம்பலமாகி ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துள்ளது.
ஒரு மருத்துவமனையின் நோயாளி போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்து வந்த 30 வயது இளைஞர் ஒருவர், தனது பணியிடத்திலிருந்தும், அண்டை நாடான ஸ்லோவாக்கியாவில் உள்ள கல்லறைகளைத் தோண்டியும் மனித உடல் பாகங்களைத் திருடி வந்துள்ளார்.
இதுகுறித்து ரகசியத் தகவலின் பேரில் ஹங்கேரியின் ‘தேசிய புலனாய்வுப் பணியகம்’ அவரது குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தியபோது, அங்கு சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மனித எலும்புகள், மண்டை ஓடுகள் மற்றும் ஒரு ஜாடியில் பதப்படுத்தப்பட்டிருந்த மனித இதயம் ஆகியவை மீட்கப்பட்டது போலீசாரையே உலுக்கியுள்ளது.
உடற்கூறியல் மற்றும் நோயியலில் நீண்டகால ஆர்வம் கொண்ட அந்த வாலிபர், ஆரம்பத்தில் விலங்குகளைக் கீறிப் பிளந்து ஆராய்ந்து வந்த நிலையில், நாளடைவில் நரமாமிசம் உண்ணும் சைக்கோவாக மாறியதை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது மீட்கப்பட்ட உடல் பாகங்கள் யாருடையது என்பதைக் கண்டறியவும், பலியானவர்களை அடையாளம் காணவும் தேசிய புலனாய்வுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
