உத்தரப் பிரதேச மாநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி ஒருவரை, முகமது முபாஷிர் (40) என்ற காமுகன் மெதுவாக பேசி ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த பிளாட் ஒன்றிற்குள் கடத்திச் சென்றுள்ளார்.

அங்கு வைத்து அந்தப் பிஞ்சு குழந்தையைக் கொடூரமாகப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தற்செயலாக இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார்.

அவரின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காமுகன் முபாஷிரைக் கையும் களவுமாகப் பிடித்து நடுரோட்டில் வைத்து ஓட ஓட விரட்டித் தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைத்தனர்.

 

“>

சரியான நேரத்தில் பொதுமக்கள் கவனித்ததால் அந்தப் பிஞ்சு உயிர் நூலிழப்பில் காப்பாற்றப்பட்ட நிலையில், தற்பொழுது குற்றவாளி முகமது முபாஷிர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள மீரட் போலீஸார், அவரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.