சர்வதேச அரங்கில் இந்தியாவை வம்புக்கு இழுத்து எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடித்த பாகிஸ்தானுக்கு, ஐநா சபையில் (UN) இந்தியா கொடுத்துள்ள மரண அடி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் சென்று, இந்தியா தங்களின் தண்ணீரைத் தடுத்து பொருளாதாரத்தை முடக்குவதாகப் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் மற்றும் தூதர் இப்திகார் அகமது ஆகியோர் அடுக்கடுக்கான புகார்களை வாசித்தனர்.
ஆனால், இதற்குப் பதிலடியாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா எடுத்த அதிரடி அஸ்திரத்தால் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் கூட்டாணியின் வாயே அடைத்துப் போயுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) தற்போது அந்நாட்டு ராணுவத்தால் மக்கள் மீது நடத்தப்படும் கொடூர அத்துமீறல்கள் மற்றும் அங்கு வெடித்துள்ள மக்கள் புரட்சியை ஐநா மேடையில் இந்தியா ஓப்பனாகப் பொளந்து கட்டியதால், அதற்குப் பதில் சொல்ல முடியாமல் பாகிஸ்தான் அப்படியே உறைந்துபோய் நின்றுள்ளது.
மேலும், ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக முதன்மைச் செயலாளர் அனுபமா சிங் பாகிஸ்தானுக்கு நேருக்கு நேராகச் சாட்டையடி கண்ணாடியைக் காட்டி, “ஒரு கொள்கையாகவே பயங்கரவாதத்தை உலகிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு, நம்மிடம் நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடிப்படையில் ஒத்துழைப்பைக் கோருவது வேடிக்கையாக உள்ளது; மேலும் காலப்போக்கில் எந்தவொரு தொழில்நுட்ப ஒப்பந்தமும் அப்படியே இருக்க முடியாது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்போது மிகவும் பழசாகிவிட்டது” என்று நெத்தியடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
பல தசாப்தங்களாகப் பயங்கரவாதத்தையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வந்த பாகிஸ்தான், தற்போது இந்தியாவின் சுயநலப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை திட்டங்களைக் கண்டு பயந்துபோய் ஐநா சபையில் மண்டியிட்டு மூக்குடைந்துள்ள இந்த பிரேக்கிங் விவகாரம் தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் பயங்கர ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.
