கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை மஞ்சு நரங் என்ற 50 வயது பெண் தனது விடாமுயற்சியால் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

மேலும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பொறுப்புகள் மற்றும் குழந்தைகளை வளர்க்க வேண்டிய சூழலால் படிப்பை பாதியில் நிறுத்திய அவர், தற்போது மீண்டும் கல்லூரியில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர முடிவெடுத்துள்ளார். தனது தேர்வுக்காகக் கல்லூரிக்குச் சென்றபோது, அவருக்கு ஆதரவாக அவரது பிள்ளைகளும் உடன் சென்று வழியனுப்பி வைத்தனர். இந்த நெகிழ்ச்சியான தருணத்தை மஞ்சு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“>

இந்நிலையில் மஞ்சுவின் இந்த துணிச்சலான முயற்சியைப் பார்த்த இணையவாசிகள் அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர். “படிப்பிற்கு வயது ஒரு தடையல்ல” என்பதை மெய்ப்பித்த அவருக்கு, சமூக வலைதளங்களில் ‘Best of Luck’ என வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதனால் சிலர் வேடிக்கையாகக் கருத்துகளைப் பகிர்ந்தாலும், பெரும்பாலானோர் அவரது தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். வயதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் கல்வி கற்கத் தொடங்கிய மஞ்சுவின் இந்தச் செயல், பலருக்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.