தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் (X) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விமர்சித்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, பத்திரிகையாளர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்துப் பாடம் எடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், “ஊடகங்கள் நமது எதிரிகள் அல்ல; அவர்கள் மக்களையும் நம்மையும் இணைக்கும் மிக முக்கியமான பாலம்” என்ற வாசகங்களும் அந்தப் படத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

அரசியல் கட்சி தொடங்கி, மாநாடு நடத்தி முடித்த பின்னரும் தவெக தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை நேரடியாகச் சந்தித்துப் பேட்டி அளிக்காததை சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்த வினோதப் பதிவை ஜெயக்குமார் வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும் இந்த நிலையில் தற்போது ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக வெற்றிக்கழகத்தினரும் இதேபோன்று பல ஏஐ புகைப்படங்களை வைத்து விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அவரது பதிவிற்கு கீழே உள்ள கமெண்ட்களை பார்த்தாலே இதுபோன்ற பல பதிலடி பதில்கள் உள்ளது. அதில் ஒன்றில் ஜெயக்குமாருக்கு தேர்தலில் பணம் கொடுக்காமல் ஜெயிப்பது எப்படி என்று முதலமைச்சர் விஜய் பாடம் எடுப்பது போல் இருக்கிறது. மேலும் ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்டோ ஓட்டுனர் வேட்பாளரான விஜய் தாமுவும் ராயபுரம் தொகுதியில் ஜெயிப்பது எப்படி என்று அவருக்கு பாடம் எடுப்பது போலவும் பல புகைப்படங்கள் இருக்கிறது. மேலும் இதனை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.