இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகத் திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்றிருந்தனர். அப்போது, அந்த வரிசையில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றிருந்தார். அந்தச் சமயத்தில், அங்கிருந்த நபர் ஒருவர் தியாகராஜன் குமாரராஜாவை வீடியோ எடுத்துள்ளார்.

​துயரமான அந்தச் சூழலில் வீடியோ எடுக்க வேண்டுமா என்ற மனநிலையில், வீடியோ எடுத்த நபரைப் பார்த்ததும் தியாகராஜன் குமாரராஜா கடும் கோபமடைந்தார். பொறுமை இழந்து அந்த நபரை நோக்கி, “அசிங்கமா இல்லையா உங்களுக்கு?” என உச்சக்கட்ட கோபத்தில் கேள்வி கேட்டுவிட்டு அங்கிருந்து விறுவிறுப்பாக நடந்து செல்கிறார். இது தொடர்பான காணொளி தற்போது எக்ஸ் (ட்விட்டர்) வலைதளத்தில் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது.