மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்பி இடத்திற்கான தேர்தல் களம், பாஜாகவின் அதிரடி நகர்வால் தற்பொழுது குதிரை பேர அச்சமாக மாறியுள்ளது. அங்கு ஒரு எம்பியைத் தேர்ந்தெடுக்க 58 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 164 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள பாஜக தனது முதல் இரு வேட்பாளர்களான தருண் சக் மற்றும் ராஜ்னீஷ் அகர்வால் ஆகியோரை எளிதாக வெற்றி பெற வைக்க முடியும்.
அதேபோல், 64 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி தங்களது வேட்பாளர் மீனாட்சி நடராஜனை எளிதாக ஜெயிக்க வைக்க முடியும் என்ற சூழல் இருந்தும், பாஜக யாரும் எதிர்பாராத விதமாக மகேஷ் கேவத் என்பவரை 3-வது வேட்பாளராகக் களமிறக்கி காங்கிரஸிற்குப் பெருத்த அதிடி ட்விஸ்ட் கொடுத்துள்ளது. பாஜகவிடம் போதிய பலம் இல்லாத நிலையிலும் 3-வது வேட்பாளரை நிறுத்தியுள்ளதால், தங்களது கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைபேசி இழுக்கப் பார்க்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைமை பயங்கர அலர்ட் ஆகியுள்ளது.
ஏற்கனவே இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மாற்றி வாக்களித்து பாஜக ஜெயிச்ச வரலாற்றுப் பின்னணி இருப்பதால், இந்த முறை தங்களது எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்க அனைவரையும் மொத்தமாக கர்நாடகாவிற்கு அதிரடியாகக் கடத்திச் செல்ல (ரிசார்ட் அரசியல்) காங்கிரஸ் முடிவு செய்துள்ளது ஒட்டுமொத்த தேசிய அரசியலிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
