ரயிலில் இருக்கைக்காகப் பயணிகள் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் பொதுப் பெட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட இந்தக் காட்சியில், இருக்கை தொடர்பாகப் பயணிக்கும் ஒரு பெண்ணுக்கும் முதியவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது.
மேலும் “நிறையப் பேசாதே, அறைந்துவிடுவேன்” என்று அந்தப் பெண் ஆக்ரோஷமாக எச்சரிக்க, அதற்குப் பதிலளிக்கும் விதமாக அந்த முதியவர் அமைதியாகச் செயல்பட்ட விதம் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ट्रेन में सीट के लिए महिला से भिड़े चचा मियां!
महिला ने हाथ दीखते हुए कहा तमाचा मरेंगे, चचा मियां ने भी मुक्का तान दिया !!
देखिए Video pic.twitter.com/5VvOFxYQht— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) June 7, 2026
“>
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில், குறிப்பாகப் பயணங்களின் போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்குவாதம் முற்றிய சூழலிலும் அந்த முதியவர் காட்டிய நிதானம் மற்றும் அவர் கடைப்பிடித்த அணுகுமுறை, ரயில்களில் நிலவும் நெரிசல் மற்றும் சக பயணிகளுடனான புரிதல் குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.
