ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி முடிந்து விமான நிலையம் சென்றபோது தான் சந்தித்த ஒரு பயங்கர கார் விபத்து குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் வர்ணனையாளராகப் பணியாற்றிய அவர், நள்ளிரவில் காரில் பயணம் செய்யும்போது தூங்கிவிட்டதாகவும், திடீரென பலத்த சத்தத்துடன் கார் மோதிய பிறகே தனக்கு விழிப்பு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

காரின் பிரேக் லைட்டுகள் எரியாத ஒரு பெரிய செமி-டிரெய்லர் டிரக்கின் பின்புறத்தில் இவர்களது கார் அதிவேகமாக மோதி, காரின் முன்பகுதி மொத்தமாக டிரக்கின் அடியில் சிக்கிக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த அதிபயங்கர விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தபோதிலும், மைக்கேல் கிளார்க் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஆனால், காரை ஓட்டி வந்த ஓட்டுநரின் காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

“>

 

விபத்து நடந்தவுடன் தங்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கி, தாங்கள் பத்திரமாக வீடு திரும்ப உதவிய இந்திய மக்களுக்கும் மற்றும் தங்களது நிலையைத் தொடர்ந்து விசாரித்து ஆதரவளித்த பிசிசிஐ நிர்வாகத்திற்கும் கிளார்க் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், தனக்கு மறுபிறவி கிடைத்தது போல் உணர்வதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.