மத்தியப் பிரதேசம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பிச்சோர் வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில், சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காக முதலை ஒன்றை இரு இளைஞர்கள் கொடூரமாக வதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர்கள் ஒரு முதலையைப் பிடித்து, அதற்கு மின்சாரம் (கரண்ட்) பாய்ச்சி, தரதரவென இழுத்துச் சென்று சித்திரவதை செய்துள்ளனர்

இந்த கொடூரக் காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்து அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர். விலங்கு வதை தொடர்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, வனத்துறை மற்றும் சிறப்புப் படை அதிகாரிகள் இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.