முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அரசின் அதிரடியான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார். இந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, ‘வெற்றித் தமிழகம்’ என்ற இலக்கை நோக்கி அரசு பயணிக்க வேண்டிய 436 தொலைநோக்குத் திட்டங்கள் (Visions) வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

​அரசின் தேர்தல் வாக்குறுதிகளையும் உள்ளடக்கிய இந்த 436 திட்டங்களும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இந்தத் திட்டங்களை எவ்வாறு மிக விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று அந்தந்தத் துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் விரிவாக ஆலோசித்து, ஒரு முழு அளவிலான திட்ட வரைவை (Detailed Action Plan) தயார் செய்ய முதல்வர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த மாஸ் பிளான்கள் அனைத்தும் முதலமைச்சரின் இறுதி ஒப்புதலைப் பெற்ற பிறகு, மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.