பாஜகவிலிருந்து முற்றிலுமாக விலகிய பின் முதன்முறையாகச் சமூக வலைதள நேரலையில் பேசிய அண்ணாமலை, தனது முன்னாள் கட்சியான பாஜக குறித்து அதிரடியான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துப் பேசியுள்ளார். தன்னை கைப்பிடித்து இந்த அரசியல் களத்திற்கு அழைத்து வந்து வாய்ப்பளித்த அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அவர், இனி மற்ற அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, தவெக, நாதக, பாமக ஆகியவற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறேனோ, அதேபோலத்தான் இனி பாஜகவையும் பார்ப்பேன் என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அதிரடியாக முழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, களத்தில் பாஜகவை எதிர்க்க வேண்டிய சூழ்நிலையும், நிலையும் வந்தால் அதை உடனடியாக, தயங்காமல் எதிர்த்து நான் களமாடுவேன் என்று அண்ணாமலை மிக ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
