“நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவு குறித்து அக்கட்சியின் முக்கிய முகமும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக ஓப்பனாகப் பேசி உடைத்திருக்கும் ரகசியம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

‘களத்தில் நமக்கு யார் உண்மையான எதிரி என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ளாமல் கோட்டை விட்டுவிட்டோம்; கடந்த பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இல்லாத ஒரு எதிரியோடு போய் நாம் தேவையில்லாமல் சண்டை போட்டு நேரத்தை வீணடித்துவிட்டோம்’ என மேடையிலேயே பகிரங்கமாகத் தனது சுயவிமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மேலும் தொண்டர்களை உத்வேகப்படுத்தும் வகையில் பேசிய அவர், ‘அடுத்த முறை நமக்கு வரப்போகும் தேர்தலில், நம்முடைய உண்மையான எதிரி யார்? என்பதை ஆரம்பத்திலேயே பக்காவாகக் கண்டுபிடித்து, அதற்கு ஏற்றபடி நம்முடைய அரசியல் செயல்பாடுகளைக் கச்சிதமாகச் செய்தால் நமக்கான வெற்றி நிச்சயம்’ என அதிரடி நம்பிக்கையை விதைத்துள்ளார்.

இல்லாத எதிரி என உதயநிதி யாரைக் குறிப்பிடுகிறார், உண்மையான எதிரி என யாரைக் கை காட்டுகிறார் என்ற விவாதம் தற்போது  ஆரம்பித்துள்ளது.”