ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட குடிகார வாலிபர்கள் இருவர் தங்களைப் பாதுகாப்புக்கு அழைத்து வந்த போலீசாருடன் பயங்கரமாக மோதி, அவர்களைக் கன்னத்தில் அறைந்த அதிரடிச் சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவமனையையும் போர்க்களமாக மாற்றியுள்ளதுடன் இதுகுறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகாமரி காவல் எல்லைக்குட்பட்ட பொது இடத்தில் குடித்துவிட்டு ரகளை செய்ததாக இந்த இரண்டு வாலிபர்களையும் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கைது செய்திருந்தனர். சட்டப்படியான வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக இவர்களைக் குர்தா மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கூட்டி வந்தபோது, திடீரென அந்த வாலிபர்கள் பாதுகாப்புக்கு வந்த போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆக்ரோஷமாக மாறினர்.
ଜଣେ କର୍ତ୍ତବ୍ୟରତ ପୋଲିସ ଅଧିକାରଙ୍କ ଉପରେ ସର୍ବସାଧାରଣରେ ମାଡ଼ ମାରିବା ନିନ୍ଦନୀୟ ।ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମରେ ପ୍ରସାରିତ ହେଉଥିବା ଏହି ଭିଡିଓ ଖୋର୍ଦ୍ଧା ଅଞ୍ଚଳର ବୋଲି କୁହାଯାଉଛି।ଏ ଘଟଣାର ତଦନ୍ତ କରି ଦୋଷୀ ବିରୋଧରେ ଦୃଢ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରିବାକୁ ଅନୁରୋଧ। @homeodisha@odisha_police @spkhordha @CMO_Odisha pic.twitter.com/iUIPr3XoS8
— BISWAL N (@NBISWAL007) June 2, 2026
ஒருகட்டத்தில் போலீசாரை அவர்கள் கைகளால் தாக்கத் தொடங்கியதால் அங்கிருந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர், இதனால் மருத்துவமனைப் பணிகள் சில நிமிடங்கள் முற்றிலும் ஸ்தம்பித்தன. நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, பாகாமரி போலீசார் உடனடியாக குர்தா டவுன் போலீசாருக்குத் தகவல் கொடுத்து கூடுதல் போலீஸ் படையை வரவழைத்தனர்.
கூடுதல் போலீசார் விரைந்து வந்து அந்த இரண்டு ரகளை செய்த வாலிபர்களையும் மடக்கிப் பிடித்துக் கச்சிதமாகக் கைது செய்தனர். அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரைத் தாக்கியது மற்றும் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது கூடுதல் வழக்குகள் பதியப்பட்டு தீவிர விசாரணை நடந்து வரும் வேளையில், இந்த அதிரடி வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
