தமிழக பாஜகவின் மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளரும், மோட்டார் பந்தய வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா, யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனால் தங்களைப் பற்றியும், குறிப்பாக தனது குழந்தைகளைப் பற்றியும் அவதூறான கருத்துகளையும், தரக்குறைவான விமர்சனங்களையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பியதாக அலிஷா அப்துல்லா கண்ணீர் மல்க குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அலிஷா அப்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனால் தன் மீதும் தன் குழந்தைகள் மீதும் நடத்தப்பட்ட அவதூறு பிரசாரத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஆவேசமாகத் தெரிவித்திருந்த அலிஷா அப்துல்லா, காவல்துறையினரிடம் புகார் அளித்து விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.