உத்திரப்பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்திற்குட்பட்ட காடிகானா பகுதியில், 7 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மதியம் சுமார் 3.30 மணியளவில், சிறுமியின் தாய் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து, வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட, சிறுமியின் சித்தப்பாவுக்கு நெருங்கிய நண்பரான தேவாங் சர்மா என்ற வாலிபர், வீட்டிற்குள் புகுந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அந்த நபர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
மேலும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய், தனது மகளின் நிலையைப் பார்த்து நிலைகுலைந்து போனார். உடனடியாக அவர் காவல் நிலையத்திற்குச் சென்று தேவாங் சர்மா மீது எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்த மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, குற்றவாளியைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தேவாங் சர்மாவை போலீஸார் கைது செய்தனர். அவர் மீதுபோக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
