கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் சுமார் 75 வருடங்களாகப் பாரம்பரியமாகச் செயல்பட்டு வந்த அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றை, இந்த கல்வி ஆண்டு முதல் திடீரென மூட உத்தரவிடப்பட்டுள்ளது ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாளை பள்ளி திறக்கப்படவிருந்த இக்கட்டான சூழ்நிலையில், நேற்றிரவு பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து அவசர அவசரமாகப் பெற்றோருக்குப் போன் செய்து, உடனே பள்ளிக்கு வந்து மாற்றுச் சான்றிதழ் (TC) வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், இன்று காலையிலேயே பதறியடித்துக்கொண்டு பள்ளிக்கு ஓடிவந்துள்ளனர்.

தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயத்தில் மாணவர்கள் பலரும் தாளாமல் கண்ணீர் விட்டுக் கதறி அழுதுகொண்டே மாற்றுச் சான்றிதழ்களை வாங்கிச் சென்ற நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.