பாஜகவில் இருந்து விலகப் போவதாக அண்ணாமலை கொடுத்த அதிரடி ராஜினாமா கடிதத்தை, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ள பகீர் தகவல் இப்போ ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் உலுக்கி எடுத்துட்டு இருக்கிறது..!
காவல்துறையிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து, 2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராக அதிரடி காட்டி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 11% வாக்குகளைத் தனித்து வாங்கிக் கொடுத்தவர் அண்ணாமலை. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அவர் மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் தலைவரான பிறகு பாஜகவின் வாக்கு வங்கி வெறும் 3%-ஆகச் சுருங்கி படுதோல்வியைச் சந்தித்தது.
இதனால் தனக்கான அங்கீகாரம் கட்சியில் கிடைக்கவில்லை என்றும், துடிப்பான அரசியலை முன்னெடுக்கத் தனிக்கட்சி தொடங்குவதே வழி என்றும் பிளான் போட்டு அண்ணாமலை இன்று டெல்லியில் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை நீட்டியுள்ளார்.
அண்ணாமலையின் இந்த திடீர் முடிவால் பதறிப்போன அமித்ஷா, கடிதத்தை ஏற்க மறுத்து அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியதோடு, தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனையும் அவசரமாக டெல்லிக்கு அழைத்துள்ளார்!
இன்று அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் இருவரையும் ஒரே நேரத்தில் அமர வைத்துப் பேச பாஜக தேசிய தலைமை மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. அண்ணாமலை தன் தனிக்கட்சி முடிவில் பிடிவாதமாக இருப்பாரா அல்லது டெல்லி தலைமையின் சமாதானத்துக்குக் கட்டுப்படுவாரா என்பது இன்று தெரிந்துவிடும் என்பதால், தமிழக அரசியல் கலத்தில் எகிறியுள்ளது எதிர்ப்பார்பு..!!!
