தவெக அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்களுக்கும் துறை சார்ந்த அனுபவம் பெரிய அளவில் இல்லாத காரணத்தால், சமீபகாலமாக அவர்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிர்வாகக் குளறுபடிகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஆளும் தவெக தலைமை, இப்போ ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது. அதன்படி, தற்போதைய அமைச்சர்களுக்குத் துறை ரீதியிலான அனுபவத்தையும், நிர்வாகத் திறமையையும் வளர்க்கும் பொருட்டு சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

வெறும் பெயரளவில் இல்லாமல், அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் டாப் வல்லுநர்களைக் கொண்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த கறார் பயிற்சி வகுப்புகளை நடத்த தலைமை பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளதாம்.

நிர்வாகத்தை அக்குவேறு ஆணிவேறாகப் புரிந்து கொண்டு மக்கள் பணிகளைச் தொய்வில்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி கிடுக்கிப்பிடி நடவடிக்கை, இப்போ தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.