சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது இ-ரிக்ஷா (E-rickshaw) ஓட்டுநர் ஒருவர் செய்துள்ள காரியம் நெட்டிசன்களைப் பெருத்த ஆச்சரியத்திலும் சிரிப்பலையிலும் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக ஆடு, மாடு அல்லது எருமை மாடுகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஏற்றிச் செல்ல மக்கள் பிக்கப் வேன் அல்லது டாடா மேஜிக் போன்ற பெரிய சரக்கு வாகனங்களையே வாடகைக்கு அமர்த்துவார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Mansoor Ali Khan (@mansooralikhanfitness)

ஆனால், இன்ஸ்டாகிராமில் ‘mansooralikhanfitness’ என்ற கணக்கில் வெளியாகி வைரலாகி வரும் வீடியோவில், ஒரு இ-ரிக்ஷா வண்டியின் பின் இருக்கையில் எருமை மாடு ஒன்றை அசால்ட்டாக அமர வைத்து ஏற்றிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

ஏற்கனவே பள்ளி குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் சென்று சர்ச்சையை ஏற்படுத்திய இ-ரிக்ஷாக்கள், இப்போது எருமை மாட்டையே ஏற்றிச் செல்வதைப் பார்த்த நெட்டிசன்கள், “பிக்கப் மற்றும் டாடா மேஜிக் வண்டிகளின் எதிர்காலமே இனி ஆபத்து தான்” என்றும், “இ-ரிக்ஷாக்கள் ரயிலின் பெட்டிகளை இழுத்துச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்றும் விதவிதமாகக் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைக் குவித்து வரும் இந்த வீடியோ, தற்பொழுது இணையத்தில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.