மும்பையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், தனது 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்திலான கார்ப்பரேட் வேலையைத் துறந்து, முழுநேர கேப் ஓட்டுநராக மாறி பெரும் வெற்றி பெற்றுள்ளார். கனடிய உள்ளடக்கக் கலைஞர் காலேப் ஃபிரீசன் என்பவருடன் அவர் பகிர்ந்து கொண்ட இந்த சுவாரஸ்யமான தகவல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஆரம்பத்தில் ஒரே ஒரு காரில் தொடங்கிய இவரது பயணம், கடின உழைப்பால் இன்று நான்கு கார்களைச் சொந்தமாக வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போது அனைத்துச் செலவுகளும் போக, மாதம் சுமார் 2 லட்சம் ரூபாயை அவர் வருமானமாக ஈட்டி வருகிறார்.

“>

இதனால் நிச்சயமற்ற மற்றும் சவாலான இந்த முடிவை எடுத்தது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், கடின உழைப்பு மற்றும் துணிச்சலான முடிவுகளே பொருளாதார சுதந்திரத்தைத் தரும் என்பதை அவர் உணர்த்தியுள்ளார். இன்று அவர் நல்ல வருமானம் ஈட்டுவதுடன், தனது வாகனங்களின் மூலம் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார். இவரது இந்த உத்வேகமளிக்கும் கதை, “வேலை எதுவாக இருந்தாலும், அதில் அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்” என்பதைப் பலருக்கும் புரியவைத்துள்ளது.