மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை 4 சிறார்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள மிக அதிர்ச்சிகரமான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கொடூர விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து மிகத் தீவிரமான விசாரணையில் இறங்கினர்.
விசாரணையின் முடிவில், இந்த கொடூர குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த 4 சிறார்களையும் போலீஸார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். 13 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவமும், அதில் சிறுவர்களே கைது செய்யப்பட்டுள்ள விவகாரமும் சோஷியல் மீடியாவில் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
