விஜய் தொலைக்காட்சியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் வில்லியாக நடித்துப் பிரபலமான நடிகை ஃபரினா ஆஸாத், சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்களின் ஆடை சுதந்திரம் மற்றும் பெற்றோர் வளர்ப்பு குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
பெண்கள் கவர்ச்சியாக ஆடை அணிவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கவர்ச்சி என்பது ஆடையில் இல்லை என்றும், அது பார்ப்பவர்களின் கண்களில்தான் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களில் தனது ஆடைகளைக் குறித்து வரும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாற்றம் என்பது நம் வீட்டில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தன் மகன் முன்னிலையில் தான் சாதாரண உடைகளையே அணிவதாகவும், அதை அவன் இயல்பான ஒன்றாகப் பார்த்து வளர்ந்தால், வெளியே பிற பெண்கள் அதுபோன்ற ஆடைகளை அணிந்திருக்கும்போதும் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வான் என்றும் ஃபரினா விளக்கியுள்ளார்.
ஒரு பெண்ணின் குணத்தை அவர் அணியும் உடையை வைத்து மதிப்பிடக்கூடாது என்பதைப் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், ஆண் குழந்தைகளைச் சரியான புரிதலுடன் வளர்த்தால் மட்டுமே பெண்களைப் பற்றிய தவறான முன்முடிவுகள் குறையும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பாலின சமத்துவம் குறித்த ஃபரினாவின் இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
