ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 96 ரன்கள் குவித்தார். 47 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் விளையாடிய அவர், காகிசோ ரபாடா வீசிய பந்தில் துரதிர்ஷ்டவசமாக சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 214 ரன்கள் குவிக்க முக்கிய அடித்தளமாக அமைந்த வைபவ், ஒரே ஐபிஎல் தொடரில் மூன்று முறை 90-களில் ஆட்டமிழந்து கிளென் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
Riyan Parag telling to sooryavanshi about his mistake 🥲🥲🥲 pic.twitter.com/igBzn07f8N
— Rahul (@Rahul74572540) May 29, 2026
இருப்பினும், சதம் அடிக்காமல் ஆட்டமிழந்த விரக்தியில் டக் அவுட்டில் அமர்ந்திருந்த வைபவ் சூர்யவன்ஷி மீது, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார். வைபவ்வை நோக்கி விரல் நீட்டி அவர் ஏதோ ஆக்ரோஷமாகப் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சதத்தை தவறவிட்ட சோகத்தில் இருந்த இளம் வீரரை கேப்டனே மைதானத்தில் கடிந்து கொண்டதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடிய போதிலும் சாய் சுதர்சன் மற்றும் கில் அதிரடியால் குஜராத் அணி எளிதாக 214 ரன்கள் குவித்து வெற்றி பெற்று பைனலுக்கு நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
